படிக்காததை கண்டித்த தாயின் தலையில் கல்லை போட்டுக்கொன்ற 14 வயது மகன்.. போலீசார் விசாரணை!

0 7444

சத்தியமங்கலம் அருகே, சரியாக படிக்காததை கண்டித்த தாயின் தலையில் கல்லை போட்டுக்கொன்ற 14 வயது மகனை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுங்கக்காரன்பாளையத்தை சேர்ந்த அருள்செல்வனின் மனைவி யுவராணி.  9ஆம் வகுப்பு படிக்கும் இவர்களது மகன் சஞ்சய், சரியாகப் படிக்காததால், அவரை தனியார் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வந்திருந்த சஞ்சையை, பெற்றோர் திட்டியுள்ளனர். நேற்றிரவு அருள்செல்வன் வெளியே சென்றிருந்த நிலையில், யுவராணி, சஞ்சய் மற்றும் 12 வயதான மகள் தர்ஷினி தூங்கிக்கொண்டிருந்தனர்.

கோபத்தில் இருந்த சஞ்சய், நள்ளிரவில் ஹாலோபிளாக் கல்லை எடுத்து, தாய் யுவராணியின் தலைமேல் போட்டுவிட்டு தப்பியுள்ளார். யுவராணி துடிதுடித்து இறந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். சஞ்சையை பிடித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments