கடன் வாங்கிய முன்னாள் பாஜக பிரமுகரின் படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஆன்லைன் லோன் ஆப் மீது மோசடி புகார்!

0 2220

சென்னையில் கடன் திருப்பிச் செலுத்த கால தாமதமானதால், பாஜக பிரமுகர்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஆன்லைன் லோன் ஆப் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டெல்லி கோபி, போலீசில் அளித்த புகாரில், கடந்த 4-ஆம் தேதி deck loan, slog loan என்ற ஆன்லைன் லோன் ஆப் மூலமாக 5,000 ரூபாய் கடன் பெற்றதாகவும், அதனை திருப்பிச் செலுத்த தாமதமானதால் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்களுடன் தனது புகைப்படத்தை இணைத்து ஆபாசமாக சித்தரித்து, செல்போனில் இருந்த அனைத்து தொடர்பு எண்களுக்கும் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments