குஜராத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தது 36-வது தேசிய விளையாட்டு போட்டி..!

0 6734
குஜராத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தது 36-வது தேசிய விளையாட்டு போட்டி..!

குஜராத்தில் நடைபெற்று வந்த 36-வது தேசிய விளையாட்டு போட்டி, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய தேசிய விளையாட்டு போட்டி, அகமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெற்றது.

இப்போட்டியில், யோகாசனம் முதன்முறையாக சேர்க்கப்பட்ட நிலையில், இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றனர்.

கடைசி நாளில் பெண்கள் வாலிபால் போட்டி, குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. பதக்க பட்டியலில் 61 தங்கம் உள்பட 128 பதக்கங்களுடன் சர்வீசஸ் அணி முதல் இடத்தையும், 39 தங்கம் உள்பட 140 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் பிடித்தன. 25 தங்கம் உள்பட 74 பதக்கங்களுடன் தமிழ்நாடு 5-ஆவது இடத்தை பிடித்தது.

சூரத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தேசிய விளையாட்டு போட்டி நிறைவு பெற்றது.

37-வது தேசிய விளையாட்டு போட்டி, வரும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோவாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments