டிபார்ட்மெண்ட் ஸ்டோர்க்கு அடியில் குழந்தைகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.!

0 2403

இங்கிலாந்தில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் அஸ்திவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

ஹாவர்ஃபோர்ட்வெஸ்ட்-ல் ஓக்கி ஒயிட் கட்டிடத்தின் மேம்பாட்டு பணியின் போது, தோண்டிய இடமெல்லாம் மனித எலும்புக்கூடுகள் கிடந்தன.

2013-ஆம் முதல் செயல்பாட்டில் இல்லாத அந்த கட்டிடத்தின் அடியில் கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகளில் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், போர்க் காயங்களுடன் ஒத்துப்போனதால், 1405-ஆம் ஆண்டில் மன்னர் ஓவைன் க்ளின்டர் தலைமையிலான பிரெஞ்சு மற்றும் வெல்ஷ் படைகளின் தாக்குதலால், இவர்கள் பலியாகி புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments