ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக அறிவித்தது மத்திய அரசு..

0 2272
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

அதிகபட்சமாக 17 ஆயிரத்து 951 ரூபாய் வரை போனசாக வழங்கப்படும் என்றும், . சர்வதேச அளவில் எல்பிஜி விலை உயர்ந்திருப்பதை கவனத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு முறை மானியமாக 22 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது என்றும், இதன்மூலம் விலை அதிகரிப்பு சுமை மக்கள் மீது சுமத்தப்படாது என்றும் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments