பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து சோழர்கள் ஆண்ட பகுதியை நேரில் காண வந்த 4 ஆந்திர இளைஞர்கள்..!

0 3607
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து சோழர்கள் ஆண்ட பகுதியை நேரில் காண வந்த 4 ஆந்திர இளைஞர்கள்..!

பொன்னியன் செல்வன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சோழர்கள் ஆண்ட பகுதியை காண ஆந்திராவில் இருந்து கும்பகோணத்திற்கு 4 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர்.

விஜய நகரத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் ,வெங்கடேஷ் ,தினேஷ் குமார், லோகேஷ் ஆகியோர், புகைப்பட கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் திரைக்கு வந்த படத்தை பார்த்த 4 பேரும், சோழர்கள் ஆண்ட பகுதியை நேரில் காணும் ஆர்வத்துடன் பல மைல் தூரம் வந்தனர்.

கும்பகோணத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களை காண 4 பேரும் புறப்பட்டுச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments