இளம்பெண் மருத்துவர் மாயம்..! பெற்றோர் அச்சம்..

0 2948
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் மாயமான பெண் மருத்துவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் மாயமான பெண் மருத்துவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் உள்ள பென்சாம் (BenSam) மருத்துவமனையில் பணி புரிந்து வந்த அனிஸ்கார்த்திகா இரவு எட்டரை மணிக்கு தினமும் வீட்டிற்கு திரும்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். சம்பவத்தன்று வீட்டிற்கு வராததால் பெற்றோர் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர்.

அவர் கிளம்பிவிட்டதாக அவர்கள் கூறிய நிலையில், செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அச்சமடைந்த பெற்றோர் மாயமான மருத்துவர் குறித்து போலீசில் புகாரளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments