இன்றும் - நாளையும் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

0 2418

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 16 மாவட்டங்களில், இன்றும் - நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் - நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்கள் உட்பட 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ள வானிலை மையம், சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், குமரிக்கடலின் தெற்கு பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments