வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த பெண்..

0 2858

புதுக்கோட்டை திருமயம் அருகே, வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி, சுமார் 8 லட்சம் ரூபாய் வரை இழந்த பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கும்மங்குடியை சேர்ந்த சீதாலெட்சுமி, இன்ஸ்டாகிராமில் அமேசான் ஸ்மால் 805 என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் லிங்கை கிளிக் செய்து, வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு, லாகின் செய்துள்ளார்.

பின்னர் 100 ரூபாய், 500 ரூபாய் முதலீடு செய்து,2000 ரூபாய் வரை வருவாய் பெற்றுள்ளார்.

இதனால் செலுத்தும் பணத்திற்கு 3 மடங்கு கூடுதலாக பணம் கிடைப்பதை நம்பி, பல தவணைகளாக ஆன்லைன் மூலம் 8 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

ஆனால் அதன்பின் பணம் திரும்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீதாலெட்சுமி, சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments