திருவாரூர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சாமி சிலைகள்.. அமெரிக்காவிலுள்ள 2 அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிப்பு

0 1940

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் வேணுகோபாலசுவாமி கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள், அமெரிக்காவிலுள்ள 2 அருங்காட்சியங்களில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

விஷ்ணு உள்ளிட்ட சாமி சிலைகள் திருடப்பட்டது குறித்த புகாரை போலீசார் விசாரித்தபோது, யோக நரசிம்மர், விநாயகர் சிலைகள் திருடப்பட்டு, அச்சு அசலாக உண்மையான சிலைகள் போல, போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து ஏற்கெனவே எடுக்கப்பட்ட படங்களை கொண்டு ஆய்வு செய்து, கான்சாஸ் சிட்டி மற்றும் மிசோரியிலுள்ள அருங்காட்சியகங்களில் அசல் சிலைகள் இருப்பதை கண்டுபிடித்து, மீட்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments