முன்விரோதம் காரணமாக இளைஞரை கடத்தி படுகொலை செய்த உறவினர்கள்.. 400 அடி ஆழ பள்ளத்தாக்கில் இருந்து இளைஞர் உடல் மீட்பு..

0 2441

திண்டுக்கல் மாவட்டம் அய்யன்கோட்டையில் முன்விரோதம் காரணமாக, கடத்தி கொலை செய்யப்பட்டவரின் சடலம், 400 அடி ஆழ பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அய்யன்கோட்டையில் வசித்துவந்த 28 வயது ரத்தினகுமாருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக, ரத்தினக்குமாரை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டதால், போலீசார் தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, 6 பேர் ரத்தினகுமாரை கடத்திச்சென்று கொலைசெய்து, புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதி பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, போலீசார், தீயணைப்பு படையினர், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்டோர் ரத்தினக்குமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கும், மீனாட்சி ஊத்து என்ற இடத்திற்கும் இடையில் சுமார் 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இருந்து ரத்தினகுமாரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது.

கொலை வழக்கில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments