எருக்கஞ்செடியோரம்… விரட்டிப்பிடித்த நடத்துனர் உயிரை மாய்த்த பெண்..! மினி பஸ்ஸில் நடந்தது என்ன ?

0 14716

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெண் பயணியை விரட்டி ச்சென்று மினி பஸ் டிரைவர்கள் இருவர் காதல் தொல்லை கொடுத்ததால் , அந்தப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார் இவரது மனைவி சஜிலா இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் பார்மசிஸ்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இவர் 4-பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து அங்கு சென்ற குளச்சல் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு 4-பக்க கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மினி பேருந்தில் வேலைக்கு சென்று வந்த போது பழக்கமான இரு பேருந்து ஓட்டுனர்கள் விஜிலாவிடம் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இருவரும் விஜிலாவுக்காக சண்டையிட்டுக் கொண்டதாலும் அவர் அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.

தற்கொலைக் கடிதத்தில் பேருந்து நிலையத்தில் அசிங்கப்பட்டு விட்டதாக எழுதப்பட்டிருந்தது. சஜிலா வின் தற்கொலைக்கு அந்த மினிபஸ் டிரைவர்கள் கொடுத்த காதல் தொல்லைதான் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியதோடு, சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பும் சஜிலாவை மினிபஸ் டிரைவர்கள் விரட்டி ச்சென்று தடுத்து நிறுத்தி கையைப்பிடித்து இழுத்து காதல் தொல்லை கொடுக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட மினி பேருந்து ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்கள் முன்வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments