துரந்தோ எக்ஸ்பிரஸ்ஸில் கொட்டிய மழை அருவி தூக்கம் தொலைத்த பயணிகள்..!

0 3091

மதுரையில் இருந்து சென்னை வந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டியில் மழை நீர் ஒழுகிய சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் வெங்கடேஷ். இவர் மதுரையில் இருந்து சென்னைக்கு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டாவது வகுப்பு குளிசாதன பெட்டியில் பயணித்தார். பலத்த மழையின் போது துரந்தோ எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி புறப்பட்ட நிலையில் ரெயிலுக்குள் அருவி போல மழை நீர் கொட்டத்தொடங்கியது

ஓட்டை குடைக்குள் மழை... உடைசலான பேருந்துக்குள் ஷவர்.. வரிசையில் ஓடும் ரெயிலுக்குள் கொட்டிய அருவியை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்

இரவெல்லாம் தூங்காமல் கண்விழித்து எடுத்த வீடியோக்களை தனது முக நூலில் பதிவேற்றம் செய்துள்ள பயணி வெங்கடேஷ், 1730 ரூபாய் கட்டணம் செலுத்தி நனைந்து கொண்டே பயணம் செய்தேன், வாழ்க தென்னக ரெயில்வே என்று பதிவிட்டுள்ளார்.

அனைத்து ரெயில்களிலும், மூட்டைப்பூச்சிகளுடன், எலிகள் வலம் வரும், பழைய ஓட்டை உடைசலான ரெயில் பெட்டிகளை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments