மறைந்த முலாயம்சிங்கின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

0 1978
மறைந்த முலாயம்சிங்கின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம்சிங் யாதவின்
உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

82 வயதான முலாயம் சிங் யாதவ், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலமானார். அவரது உடல், சொந்த ஊரான சைஃபயிக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிற்பகலில் நுமாய்ஷ் மைதானத்தில் இருந்து முலாயம் சிங்கின் உடல் ஊர்வலமாக கொண்டுச்செல்லப்பட்டது. இதன்பின்னர், முலாயம் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தாயாரும் சமாஜ்வாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் உள்ளிட்ட பலர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments