தஸ்ஸூ.. புஸ்ஸூன்னு வயிறெல்லாம் எரியுது.. அமைச்சரின் ஆதங்கம்..! தமிழ் பெயர் சூட்ட வேண்டுகோள்..!

0 2638
தஸ்ஸூ.. புஸ்ஸூன்னு வயிறெல்லாம் எரியுது.. அமைச்சரின் ஆதங்கம்..! தமிழ் பெயர் சூட்ட வேண்டுகோள்..!

பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு புரியாத மொழியில் பெயர் வைப்பதை பார்த்து வயிறு எரிவதாக வேதனைப்பட்ட அமைச்சர் தா.மோ அன்பரசன், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேட்டில் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் ஆகியோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்தத்தை நடத்தினர்.

விழாவில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருவுற்ற தாய்மார்கள் அனைவரும், உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரினை சூட்ட வேண்டும் என்றும் தற்போது வடமொழி கலந்த பெயரேயா அல்லது புரியாத பெயரேயோ தஸ்ஸு.. புஸ்ஸுன்னு வைப்பதாக ஆதங்கம் தெரிவித்தார்.

ஆகவே வீட்டுக்காரர் சொன்னாலோ, மாமியார் சொன்னாலோ ஜாதக்காரங்கிட்டவோ கேட்காமல், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments