கல்லூரி மாணவரை கடத்தி திருமணம் செய்த பெண் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

0 12387

ஓமலூர் அருகே கல்லூரி மாணவரை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்துவரும் தங்களது மகனை காணவில்லை என்று பெற்றோர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் மாணவரை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் அரங்கனூர் பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பவர் திருமண வயது அடையாத மாணவரை கடத்திச் சென்று திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments