போட்டி போட்டுக்கொண்டு பள்ளி வேன்களை இயக்கிய ஓட்டுநர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த ஒரு வேன் கவிழ்ந்து விபத்து...

0 4272

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இரண்டு தனியார் பள்ளி வேன்கள் ஒன்றை ஒன்று முந்திசெல்ல முயன்றதில், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வேன் சாலையோரத்தில் கவிழ்ந்ததில் 25 மாணவ மாணவிகள் காயமடைந்தனர்.

கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் ஜெயப்பிரியா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 2 வேன்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி சென்ற போது அதன் ஓட்டுநர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை இயக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது கோ.ஆதனூர் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க ஒரு வேன் இடதுபுறமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments