உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க பரிந்துரை..

0 1960

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவிக்கு சந்திரசூட் பெயரை தலைமை நீதிபதி யுயு லலித் பரிந்துரை செய்துள்ளார்.

தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகிக்கும் யுயு லலித், வரும் நவம்பர் மாதம் 8ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

இந்நிலையில், தனக்கு அடுத்த மூத்த நீதிபதியான சந்திரசூட் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு மத்திய அரசுக்கு யுயு லலித் பரிந்துரை செய்துள்ளார்.

அவரது பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு நியமிக்கும் பட்சத்தில், உச்சநீதிமன்ற 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments