இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இன்று 80வது பிறந்தநாளை ஒட்டி நள்ளிரவில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்.!

0 4461

இந்தி திரையுலக சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 80வது பிறந்த நாளை ஒட்டி நள்ளிரவில் மும்பை வீட்டிற்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

கடந்த 1942ஆம் ஆண்டு அக்கோடபர் 11ஆம் தேதி பிறந்த அமிதாப் பச்சன், இந்தி திரையுலகில் நுழைந்து கொடி கட்டிப் பறந்து சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார்.

தாதா சாகேப் விருது, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அமிதாப் பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ள அமிதாப்புக்கு இன்று 80வது பிறந்த நாளாகும்.

அவரது பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments