பாதுகாப்புப் படையினர் நடத்திய பயங்கரவாத வேட்டையில் குண்டு பாய்ந்து ராணுவ நாய் பலத்த காயம்..!

0 2234

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ராணுவ மோப்ப நாய் பலத்த காயமடைந்தது.

டாங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், ராணுவ மோப்ப நாய் ஜூம் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடந்த மோதலில், மறைந்திருந்த பயங்கரவாதிகள் நாயை நோக்கி இருமுறை சுட்டதில் படுகாயமடைந்தது. பயங்கரவாத வேட்டையில் தோட்டாக்கள் ஏந்தி திறம்பட செயல்பட்ட ராணுவ மோப்ப நாய் ஜூம் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments