நவராத்திரி பண்டிகையின்போது வாகன விற்பனை 57 சதவீதம் அதிகரிப்பு - 5,39,227 யூனிட்டுகள் விற்பனை..!

0 3118

இந்தியாவில் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது வாகன விற்பனை 57 சதவீதம் அதிகரித்ததாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை 5 லட்சத்து 39 ஆயிரத்து 227 யூனிட்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்து 69 ஆயிரத்து 20 இருசக்கர வாகனங்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 521 பயணிகள் வாகனங்களும், 22 ஆயிரத்து 437 வர்த்தக வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments