கதவு மூடப்படாமல் அடுத்த தளத்திற்கு சென்ற லிஃப்ட்.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்..!

0 2205

ரஷ்யாவில் லிஃப்ட் ஒன்று பழுதாகி கதவை மூடாமலே அடுத்த தளத்திற்கு சென்ற நிலையில், நூலிழையில் ஒருவர் உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப கோளாறால் லிஃப்டின் கதவு மூடாமலேயே திடீரென அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது. லிஃப்ட் தளத்தில் நின்ற போது, ஒருவர் அதில் இருந்து வெளியேறுகிறார், உடனே மற்றொருவர் லிஃப்டில் ஒரு காலை வைத்தபோது, திடீரென அந்த லிஃப்ட் மேல ஏறத் தொடங்கியது.

மொபைல் பார்த்துக்கொண்டே லிஃப்ட்டில் ஏற முயன்ற அவரை லிஃப்ட் தீடீரென்று மேல தூக்கிச் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் சுதாரித்து பின்நகர்ந்தார்.

போனை பார்த்து வந்து, இதை கவனிக்காமல் இருந்திருந்தால் அவரின் தலை மேல் தளத்தில் பலமாக மோதியிருக்க வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments