'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவி அணிந்திருந்த புடவைகள் ஏலம் விட முடிவு - இயக்குநர் கௌரி ஷிண்டே..!

0 3163

'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அணிந்திருந்த புடவைகள் அனைத்தையும் ஏலம் விட முடிவு செய்திருப்பதாக அந்த படத்தின் இயக்குநர் கௌரி ஷிண்டே அறிவித்திருக்கிறார்.

பாலிவுட் இயக்குநர் ஆர்.பால்கி தயாரிப்பில், கௌளரி ஷிண்டே இயக்கிய இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம், 2012-ல் வெளியானது.

படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படத்தில் ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகளை ஏலத்தில் விடுவதாகவும், அதல் கிடைக்கும் தொகையை ஏழைச் சிறுமிகளின் கல்விக்காக நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு, நன்கொடையாக வழங்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments