அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை

0 2048

அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகள் குறித்த விரிவான ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக, அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments