வீட்டுக்கு வேட்டு வைத்த 2k லிட்டில் பிரின்சஸ்.. தீபாவளி வருகிறது உஷார்..!

0 4292

வீட்டு வாசலில் லிட்டில் பிரின்சஸ் ஒருவர் பற்ற வைத்த ராக்கெட் வெடி மொத்தப்பட்டாசு குவியல் மீது விழுந்து வெடித்ததில் மொத்த வெடியும் வெடித்து சிதற அந்த சிறுமியின் தாய் மற்றும் சகோதரி விழுந்து அடித்து ஓடி உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பட்டாசு பற்றவைக்கும் சிறுவர், சிறுமிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கேரளாவில் வீட்டு வாசலில் தாய் அமர்ந்திருக்க , சகோதரி நின்றிருக்க கையில் ராக்கெட் வெடியுடன் ஹாயாக சென்ற 2k லிட்டில் பிரின்சஸ் ஒருவர் வீட்டு முன்பு உள்ள புல் தரையில் குத்தியபடி ராக்கெட் வெடியை பற்ற வைக்க அது வான் நோக்கி செல்லாமல் சரிந்து வீட்டை நோக்கி பாய்ந்தது.

பற்ற வைத்த சிறுமி பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓட, பாய்ந்துவந்த பட்டாசு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு குவியலில் விழுந்ததால் மொத்தப்பட்டாசும் வெடித்துச்சிதற வாசலில் அமர்ந்திருந்த தாய் விழுந்தடித்து எழுந்து ஓடினார்.

அருகில் நின்றிருந்த சகோதரியோ வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

பார்ப்பதற்கு இந்த காட்சிகள் வேடிக்கையாக இருந்தாலும் , சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த விபரீத பட்டாசு விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் பிரபலங்கள் , இன்னும் இரு வாரங்களில் தீபாவளி வர இருக்கும் நிலையில் ராக்கெட் பட்டாசுகளை வெடிக்க சிறுவர் சிறுமிகளை அனுமதிக்காதீர்கள் என்றும், பாட்டிலில் வைத்து மட்டுமே பெரியவர்கள் ராக்கெட் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். பட்டாசு பற்ற வைக்கும் போது சிறு கவனக்குறையும் பெரும் விபத்துக்களை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments