பணமாலையுடன் மணமகன்.. ஆழ்ந்த உறக்கத்தில் மணப்பெண்.. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காமெடி..!

0 3173

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண் தூங்கிக்கொண்டிருந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மணமகன் பண மாலையுடன் நிற்கிறார். அவரது அருகேயுள்ள இருக்கையில் பட்டுப்புடவை, தங்க நகை அலங்காரத்துடன், மணப்பெண் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர், செல்போனில் இதை வீடியோ பதிவு செய்து வெளியிட,இணைய தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்வையிட்ட பலரும், தூங்கும்போது மணப்பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று, பதிவிட்டு வருகின்றனர்.

">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments