தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப் படையை உருவாக்க அவசியமில்லை -உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

0 2226

பயங்கரவாத தடுப்பு படையை அமைக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவை உருவாக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி, ஜெகன்நாத் என்ற வழக்கறிஞர் வழக்குத்தொடர்ந்தார். இதன் மீதான இன்றைய விசாரணையின்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளதாக கூறிய நிலையில், பயங்கரவாத தடுப்புப்படையை அமைக்கக்கோரி, வழக்கு தொடர்ந்தது ஏன்? என, மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காவல்துறையில் ஏற்கனவே 3 பிரிவுகள் உள்ளதால், தமிழகத்தில் பயங்கரவாத தடுப்புப் படையை உருவாக்க அவசியமில்லை என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments