அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த கட்சியினரை பார்த்தே பயப்படுவதாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அவர்களை வரவேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றார். மக்களவைத்தேர்தலில் அதிமுக கூட்டணி, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments