காதலன் வேறு பெண்ணை காதலிப்பதாக சொன்னதால் இளம்பெண் தற்கொலை

0 2746

சென்னையை அடுத்த மாதவரம் அருகே, காதலன் வேறு பெண்ணை காதலிப்பதாக சொன்னதால் மனமுடைந்த இளம்பெண், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாத்தூரை சேர்ந்த 23 வயதான பிகாம் பட்டதாரியான ஏஞ்சலும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான தனுஷும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரது பெற்றோரும் திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த வாரம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஏஞ்சலுக்கு அனுப்பிய தனுஷ், தான் இந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் சண்டை பெரிதான நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏஞ்சல் தற்கொலை செய்துகொண்டார். வீடியோ மற்றும் வாட்ஸ்ஆப் சாட்டுகளை வைத்து, தனுஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments