லிப்டில் சிக்கிய குடும்பம் - பத்திரமாக மீட்ட போலீசார்.!

0 2506

சென்னை தியாகராயர்நகரில் இயங்கி வந்த தனியார் உணவகத்தின் லிப்ட்டில் சிக்கிய 7பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜி.என்.செட்டி சாலையில் இயங்கி வரும் மல்லு ஜாயிண்ட்  என்ற தனியார் உணவகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 7பேர் உணவு அருந்த சென்றுள்ளனர். லிப்ட்டில் சென்ற அவர்கள்  உள்ளே சென்று கதவை மூடியதும் லிப்ட் இயங்கவில்லை .

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து லிப்ட் கதவை உடைத்து உள்ளே இருந்த 3ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments