பாதுகாப்பு அமைச்சகத்தில் கீழ்நிலை பணிகளுக்கான தேர்வில் புளுடூத் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய 29 பேர் கைது!

0 2656

சென்னையில் நடந்த பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான கீழ்நிலை பணிகளுக்கு நடந்த தேர்வில் புளுடூத் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய அரியானாவைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

நந்தம்பாக்கம் எம்.எச். சாலையில் ஆர்மி பப்ளிக் பள்ளியில் "Defence civilian Recruitment Group 'C' Exam" நேற்று காலை மற்றும் மாலை நடைபெற்றது.

இந்த தேர்வில் மொத்தம் ஆயிரத்து 728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதில் பங்கேற்ற அரியானாவைச் சேர்ந்த சுமார் 29 நபர்கள் சிறிய அளவிலான ப்ளூடூத் டிவைஸ் பயன்படுத்தி தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத நபர் உதவியுடன் வினாக்களை தெரிவித்து விடைகளை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சஞ்சய் என்பவருக்கு பதில் வினோத் சுக்ரா என்பவரை வைத்து தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments