தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

0 3254

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்துவருகிறது.

அதன் தொடர்ச்சியாக வடஇலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments