2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் இன்று தொடக்கம்..!

0 1928

2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகளை மத்திய அரசு இன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்வார் என  எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக மத்திய அமைச்சகங்களுடன் நிதி தொடர்பான ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

முதல் நாளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகம், தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சகம், புள்ளியியல்-திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments