பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: பிஎப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை..!

0 2720

கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தி லேப்டாப், சிம்கார்டு, வங்கி பாஸ் புக் உள்ளிட்ட 31 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

கருமன்கூடலைச் சேர்ந்த பாஜக பிரமுகரான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த மாதம் 24-ம் தேதி இரவு மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர்.

இதுதொடர்பாக ஷமில்கான் என்பவரை கைது செய்த போலீசார் நேற்று மதியம் குளச்சலில் உள்ள அவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments