உலகம் முழுவதும் ரூ.355 கோடி வசூல் செய்து புதிய சாதனை - பொன்னியின் செல்வன்..

0 36457

பொன்னியின் செல்வன் முதலாவது பாகம் திரைப்படம் 9 நாள்களில் 355 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

மணிரத்னம் இயக்கி ஏஆர் ரகுமான் இசையமைத்து வெளியாகியுள்ள அப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

அப்படம் திரையரங்குகளில் வெளியாகி சனிக்கிழமை வரை 355 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மட்டும் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது காஷ்மீர் பைல்ஸ் படம் 9 நாள்களில் வசூலித்த 340 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments