டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா..

0 2643

மத மாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்தார்.

இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற அசோகா விஜய தசமி கொண்டாட்ட  நிகழ்ச்சியில், ஏராளமானோர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்தை தழுவினர்.

இதில் ராஜேந்திர பால் கவுதம் பங்கேற்ற நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென பாஜக வலியுறுத்தியது.

இதுதொடர்பாக டெல்லி காவல்துறையில் அவருக்கு எதிராக பாஜக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments