திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பத்தில் வேன் மோதி ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

0 3426

காரைக்குடி - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில்,ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்றிரவு தேவக்கோட்டையில் உள்ள ஒரிக்கோட்டையில் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மைக்செட் போட போன 7 பேர், நிகழ்ச்சி முடிந்தவுடன் வேனில் திருச்சி திரும்பியுள்ளனர்.

தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர், காரைக்குடி அருகே ஆவிடப்பொய்கை பகுதியில், மின்கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

விபத்தில் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் நிலையில், ஒருவர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments