திமுக வார்டு கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது ..!

0 3958

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே, போட்டோ ஸ்டூடியோவிற்குள் புகுந்து, திமுக வார்டு கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

பாளையம் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளாவின் கணவர் தாமரைக்கண்ணன் நேற்றிரவு, தான் நடத்திவரும் ஸ்டூடியோவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது உள்ளே புகுந்த முதியவர், தாமரைக்கண்ணனை சரமாரியாக வெட்டிய நிலையில், அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், முதியவரை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததோடு, படுகாயமடைந்த தாமரைக்கண்ணனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசார் விசாரித்ததில் அந்த முதியவர், கரூரை சேர்ந்த சுப்புலட்சுமண முத்தரசன் என்பதும், இவரது மகள் கடந்த மாதம் குடும்பத்தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அந்த வழக்கில் கைதான இவரது மருமகன் சந்தனத்துரையை ஜாமீனில் வெளியே எடுத்ததால், தாமரைக்கண்ணனை கொல்ல முயன்றதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments