காதல் திருமணம் செய்த மகளை கணவன் வீட்டில் இருந்து அடித்து இழுத்துச் சென்ற பெற்றோர்..

0 3279

ஆந்திராவில், காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, அவரது கணவன் வீட்டிற்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தி அடித்து இழுத்துச்சென்ற பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

திருப்பதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயின்று வரும் சுஷ்மாவும், சுவிம்ஸ் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வரும் மோகன கிருஷ்ணாவும் காதலித்ததாக கூறப்படுகிறது.

சுஷ்மா வீட்டில் இருவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் எதிர்ப்பை மீறி இருவரும் சந்திரகிரியில் திருமணம் செய்துகொண்டனர்.

இதனையறிந்த சுஷ்மாவின் பெற்றோர், கடந்த 7-ஆம் தேதி அடியாட்களுடன், மோகன கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று, தாக்குதல் நடத்தி சுஷ்மாவை அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

குண்டூரில் இரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுஷ்மா, அங்கிருந்து தப்பி, திருப்பதி எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments