அமெரிக்கா ஓஹியோ மாகாணத்தில் பள்ளியில் கால்பந்து போட்டியின்போது துப்பாக்கிச்சூடு - 3 பேர் படுகாயம்..!

0 1846

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில், பள்ளியில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் காயமடைந்தனர்.

டொலிடோ நகரிலுள்ள விட்மர் உயர்நிலைப்பள்ளி ஸ்டேடியத்தில் நேற்றிரவு, மற்றொரு பள்ளியுடனான கால்பந்து போட்டி நடைபெற்றது.

அப்போது ஸ்டேடியத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு, ஓட்டம் பிடித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடிவரும் போலீசார், தகவல் அளிப்போருக்கு, இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments