"வயதாகி விட்டதால் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உளறுகிறார் "... தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

0 3777

வயதாகி விட்டதால், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உளறுகிறார் என்று, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியில் பதவி தருவதாக நிதீஷ்குமார் கூறியதாக, பிரசாந்த் கிஷோர் முன்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிதீஷ்குமார், அது பொய்யென்றும், பிரசாந்த் கிஷோரை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு இன்று பதிலளித்த பிரசாந்த் கிஷோர், நிதீஷ்குமாருக்கு வயதாகி விட்டது என்றும், அதன் விளைவு நிதீஷ்குமாரிடம் வெளிப்படுகிறது எனவும் கூறினார். தம்மை பாஜக இயக்குகிறது எனில், காங்கிரஸை வலுப்படுத்துவது குறித்து தாம் ஏன்? பேச வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் பதில் கேள்வியெழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments