குப்யான்ஸ்க் நகரை மீட்க நடந்த மோதலில் 240 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர் - ரஷ்யா அறிவுப்பு..!

0 2220

கார்கீவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 240-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. குப்யான்ஸ்க்  நகரை மீட்க பெர்ஷோத்ரவ்னேவ் மற்றும் யாஹிட்னே  கிராமங்களை நோக்கி உக்ரைன் படைகள் முன்னேறிய நிலையில், ரஷ்ய படைகளின் பதில் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பெட்ரோபாவ்லிவ்கா மற்றும் கிராஸ்னி பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில், சுமார் 140 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 பீரங்கிகள்,8 காலாட்படை வாகனங்கள் மற்றும் நான்கு கார்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments