சபோரிஜியா நகரில் ஏவுகணைகளை ஏவி ரஷ்ய தாக்குதல் - ஒரு குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்...

0 2384

தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா நகரில் அடுத்தடுத்து 7 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

வியாழக்கிழமை அன்று விடியற்காலையில் நடந்த தாக்குதலில் ஐந்தடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

தாக்குதல் நடந்த அன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து தற்போது 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments