அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் பெண்களுக்கு வாய்ப்பு - விமானப்படைத் தளபதி விவேக் ராம் சௌத்ரி

0 2236

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு முதல், பெண் வீராங்கனைகள் விமானப்படையில் சேர்க்கப்படுவார்கள் என, விமானப்படைத் தளபதி விவேக் ராம் சௌத்ரி கூறியுள்ளார்.

சண்டிகரில் விமானப்படை தின நிகழ்ச்சியில் இதனை தெரிவித்த அவர், தனி ஆயுத பிரிவினை தொடங்க, அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

இதன் மூலம், வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்களை கையாளும் திறன் மேம்படும் என்றும் குறிப்பிட்டார். 3 ஆயிரம் வீரர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளிக்கப்படுவதாகவும் விமானப்படை தளபதி விவேக் ராம் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments