கூலிப்படையை ஏவி தச்சுத்தொழிலாளியை கடத்தியதாக வி.சி.க. மகளிர் அணி துணைத்தலைவி கைது..

0 8132

கடன் தொகையை வாங்குவதற்காக, கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்தியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி ஞானமணியை, சில நாள்களுக்கு முன்பு சிலர் கடத்தி சென்று, பணம் கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது .

புகாரின்பேரில் தமிழ் அழகன், வேல்மணியை கைது செய்து போலீசார் விசாரித்ததில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவி சுதாவிடம், ஞானமணி ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியதையும், அதை திரும்ப வாங்க, அவரும், விசிக ஒன்றிய செயலாளர் ரவியும் கூலிப்படையை அனுப்பியதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சுதாவை கைது செய்த போலீஸ், ரவி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments