மகனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தந்தை - சிறுவனுக்கு தீவிர சிகிச்சை..

0 3544

திருத்தணி அருகே, மகனை கடித்த பாம்புடன் தந்தை ஒருவர், அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணி.

நேற்றிரவு தனது 7 வயது மகனை பாம்பு கடித்துவிட்டு, மகன் மீதே படுத்துக்கொண்டிருப்பதை கண்டு, மணி அதிர்ச்சியடைந்தார். கட்டு விரியன், கண்ணாடி விரியன் என இரண்டு பாம்புகளும் படுத்திருந்த நிலையில், எந்த பாம்பு கடித்தது என தெரியாததால், இரண்டு பாம்புகளை அடித்த அவர், தனது மகனுடன் பாம்புகளையும் எடுத்துக்கொண்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சிறுவன் தற்போது மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments