ரயிலில் பெண் பயணிகளிடம் அத்துமீறல் - தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகர்களை மிரட்டிய போதை ஆசாமி..!

0 3498
ரயிலில் பெண் பயணிகளிடம் அத்துமீறல் - தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகர்களை மிரட்டிய போதை ஆசாமி..!

சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில், பெண்களிடம் அத்துமீறிய போதை ஆசாமியை பிடித்து, சக பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

நேற்றிரவு மதுபோதையில் டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியான எஸ்.3 கோச்சில் ஏறிய அந்த நபர், பெண் பயணிகளிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக் கேட்ட பெண் டிக்கெட் பரிசோதகரை, அந்த போதை ஆசாமி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படும் நிலையில், அங்கு வந்த ஆண் டிக்கெட் பரிசோதகர்களையும் அவன் மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததும், பயணிகள் அந்த நபரை, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments