உத்தரகாண்ட் பனிச்சரிவு - மேலும் 10 பேரின் உடல்கள் மீட்பு..!

0 2936
உத்தரகாண்ட் பனிச்சரிவு - மேலும் 10 பேரின் உடல்கள் மீட்பு..!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

அங்குள்ள திரௌபதி கா தண்டா மலைசிகரத்தில் ஏறிய 41 பேர் கொண்ட மலையேறும் குழு, திரும்பி வரும் போது 17 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிசரிவில் சிக்கினர்.

இதுவரை 26 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்களை கீழே கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எல்லைபாதுகாப்பு படையினர், தேசிய,மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், இந்திய விமானப்படையினர் என மொத்தம் 30 குழுக்கள் இந்த மீட்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments