முறையற்ற உறவை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. ஆண் நண்பருடன் இணைந்து கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி..!

0 5712
முறையற்ற உறவை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. ஆண் நண்பருடன் இணைந்து கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆண்நண்பருடன் இணைந்து கூலிப்படையை ஏவி கணவனை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவத்தில் மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றி வேல் என்பவருக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயமடைந்த வெற்றி வேலை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு ரேவதி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று முன்தினம் திடீரென வெற்றிவேல் உயிரிழந்த நிலையில், மனைவி ரேவதியிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

வெற்றிவேல் தங்கையின் கணவர் நாகராஜிடம் 3 ஆண்டுகளுக்கு மேலாக ரேவதி பழகி வந்ததை தட்டிக் கேட்டதால், கூலிப்படையை ஏவி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments