"அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா" - கடும் நிபந்தனைகள் விதித்த கேரள அரசு..!

0 3054
"அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா" - கடும் நிபந்தனைகள் விதித்த கேரள அரசு..!

கேரளாவில் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா பேருந்தை அதிவேகமாக ஓட்டிச்சென்று பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்தையடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்யக் கூடாது என்றும், பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும், போக்குவரத்துறையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments